கொளுத்தும் வெயில்.. குளுகுளு பேருந்துகளை விரும்பும் பயணிகள்..! - Seithipunal
Seithipunal


கோடை வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளதால், மக்கள் குளிர்சாதன பேருந்துகளை விரும்புவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்து கடந்த மார்ச் மாதம் முதல் முடக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர், பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததும் பேருந்துகள் இயங்க தொடங்கின. ஆனால், குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. 

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு வழிமுறையுடன் குளிர்சாதன பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கோடைகாலம் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

இதனால் அரசு போக்குவரத்துக்கு கழகத்திற்கு குளிர்சாதன பேருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கையில், " தமிழக அரசின் அனுமதியால் கடந்த மாதம் முதல் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அரசு போக்குவரத்து கழகத்தில் 700 குளிர்சாதன பேருந்துகள் உள்ளது. கடந்த மாதம் வரை 280 பேருந்துகள் மட்டுமே இயங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் மக்கள் குளிர்சாதன பேருந்துகளை விரும்புகிறார்கள். இதனால் கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்பட்டு, மொத்தமாக 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

பயணிகள் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையும் அதிகரித்து, மேலும் கூடுதல் குளிசாதன பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்படும் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Bus Travel Passengers Like Air Condition Bus avoid Heat due to Summer Season


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->