சுபநிகழ்ச்சிகள், ஆன்மிக சுற்றுலா செல்ல தமிழக அரசு பேருந்தை புக் செய்வது எப்படி? முழு விவரம்! - Seithipunal
Seithipunal


சுபநிகழ்ச்சிகள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என்று, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் (UD, A/C Seater cum Sleeper and Non A/C Seater cum Sleeper) தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும். அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த ஊர்தி (Contract Carriage) அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும். மேற்கண்ட பேருந்து வசதி சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் மற்றும் இதர இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு இணையதள முகவரி www.tnstc.in மற்றும் கீழ்குறிப்பிட்டுள்ள அலை பேசி எண்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அலை பேசி எண்.

9445014402.
9445014424,
9445014463

மேலும் ஒரு அறிவிப்பு!

நாளை (ஆக.03) முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பல்லாவரம், தாம்பரம் பேருந்து நிலையங்களிலிருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தியாகராயநகர் மற்றும் பிராட்வே ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பணீந்திர ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Bus SETC Service


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->