அடுத்த அதிரடி... கிறித்துவ மதம் மாறிய எஸ்.சி மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை... தமிழக அரசு அறிவிப்பு...!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையிலும் விளிம்பு நிலை மக்கள் தங்கள் பொருளாதாரத்தில் முன்னேற கல்வியே சிறந்த உறுதுணையாய் இருக்கும் என்ற நோக்கத்துடனும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் முழு நேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டமும் ஒரு தலையாய திட்டமாகும். 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் முழுநேரம் முனைவர் பட்டப்படிப்பு (P.hd) மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறுத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் இத்திட்டத்தின் தகுதி பெற குடும்ப வருமானம் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தகுதி பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.1,00,000/- வீதம் 1600 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

2022-2023 ஆம் ஆண்டு திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த தற்பொழுது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பயன்பட விரும்புகிறவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10/02/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் "இயக்குனர் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகம் எழிலகம் சேப்பாக்கம் சென்னை-60005" என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முந்தைய கல்வி ஆண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது" என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt announced scholarship for students converted to Christianity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->