முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு முன்னாள் படை வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பேசி இருப்பதாவது, 

கைம்பெண்கள் மற்றும் போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகை, அனைத்து முன்னால் படை வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். 

இந்நிலையில் அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் பயனடைவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt announced Ex Servicemen tax concession


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->