ஜன.13ல் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்.. தமிழக அரசு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி தடை அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, செங்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்ச மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் புத்தாண்டு விடுமுறையை தவிர்த்து அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது. அவ்வாறு வழங்கப்படும் டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கும் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டிருக்கும். இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவதற்காக ஜனவரி 13ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொங்கலுக்கு அனைத்து மக்களுக்கும் எளிதாக பொங்கல் பரிசு கிடைக்கும் வகையில் ஜன.13ம் தேதி அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt announced all ration shops should be open on Jan 13


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->