#சென்னை || இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார்., மக்களே உஷார்.!  - Seithipunal
Seithipunal


சென்னை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 307 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணி முதல் தொடங்கிய ஊரடங்கு, நாளை காலை 5 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த ஊமுழு ஊரடங்கில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்கும் வெளியே வரக்கூடாது என்று, தமிழக அரசும் போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு இந்த ஊரடங்கு உத்தரவை மீறி சென்னையில் வெளியே சுற்றிய 307 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றிய 280 பைகள், 16 ஆட்டோக்கள், 11 இலகுரக வாகனங்கள் என 307 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும், சென்னையில் முகக்கவசம் அணியாத 5469 பேரிடம் இருந்து, 10 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதம் வசூலித்து உள்ளனர். 

சமூக இடைவெளியை கடைபிடிக்காது தொடர்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 13 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn full lockdown 2022 jan 16


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->