#Breaking: ரஜினிகாந்துடன் அதிமுக கூட்டணியா?.. துணை முதல்வர் ஓ.பி.எஸ் பதில்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவில், " ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, வெளிப்படையான, நாணயமான, ஊழலற்ற, ஜாதி - மதம் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.. அற்புதம்.. அதிசியம் கட்டாயம் நிகழும் " என்று தெரிவித்து இருந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், " கொடுத்த வாக்கை என்றைக்குமே நான் மாறமாட்டேன். என்னை வாழவைத்த தெய்வங்கள் தமிழர்கள். இன்று தமிழர்களுக்காக உயிரை விடுவதை பெருமையாக நினைக்கிறன். இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை. மாற்றத்தை கட்டாயம் கொண்டு வருவேன்.. நான் வந்ததும் மாற்றத்தை கொடுப்பது உங்களின் கையில் " என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தேனியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர், " ரஜினியின் அரசியல் வரவு நல்வரவாகட்டும். ரஜினிகாந்த் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது எதிர்காலத்தில் நிகழலாம். வாய்ப்புகள் நிகழலாம் என்ற பட்சத்தில் கூட்டணி அமையும் " என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Deputy CM Paneer Selvam Pressmeet at Theni 3 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->