திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்.. ஆனந்த கண்ணீரில் பேச வாய்வராது திகைத்த குடும்பம்.!
Tiruvannamalai Collector Sandeep Nanduri IAS
திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்தவர் ஜெகநாதன். இவர் நெசவு கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், முதுகு தண்டுவட பாதிப்பால் அவதியுற்றுள்ளார். இதனையடுத்து தனது தந்தையின் படிப்பிற்கு உதவி செய்யக்கூறி அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு வாட்சாப்பில் உதவி செய்ய கூறி கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பான தகவலை கண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் கந்தூரி, ஜெகநாதனின் தங்கை கல்லூரியில் படிக்க ரூ.31 ஆயிரம் கட்டணத்தை செலுத்திய நிலையில், ரூ.78 ஆயிரம் செலவில் ஜெகநாதனிற்கு வீல் சேரும் வாங்கி கொடுத்துள்ளார். இதனை அறிந்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவியந்தாங்கல் கிராமத்தை சார்ந்தவர் ஜெகநாதன். இவரது தந்தை சம்பத். சம்பத் நெசவு கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், ஜெகநாதன் முதுகு தண்டுவட பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மொத்தமாக மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை சம்பத்திற்கு உள்ள நிலையில், இரண்டு பெண் குழந்தைகளை வறுமையிலும் திருமணம் செய்து வைத்துள்ளார். கடைசி பிள்ளை கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்த நிலையில், படிப்பு செலவிற்கு காசு இல்லாமல் தவித்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு ஜெகநாதன் வாட்சாப் மூலமாக தகவல் தெரிவிக்கவே, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உடனடி உதவி செய்துள்ளார். இதனால் நெகிழ்ந்துபோன சம்பத்தின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai Collector Sandeep Nanduri IAS