ஆரணி அருகே காவல்துறை வாகனம் - கார் மோதிய விபத்து..! அதிவேகத்தில் மாற்றுப்பாதையில் சென்றதால் சோகம்..!! - Seithipunal
Seithipunal


ஆரணி அருகே நடைபெற்ற விபத்தில், காவல்துறையினரின் வேன் தவறான பாதையில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியது உறுதியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியை அடுத்துள்ள கண்ணமங்கலம் பகுதியில் காவல்துறை வேன் - தனியார் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், காரில் இருந்த பெண்மணி பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், காவல்துறை வாகனத்தில் பயணம் செய்த 12 க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வாகனங்கள் அழகுசேனை கிராம பகுதியில் உள்ள வளைவில் கார் - காவல்துறை வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

காவல் துறையினர் பயணித்த வேன் தலைகுப்பற கவிழ்ந்து இருக்கிறது. இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தாங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையை சார்ந்த 2 பெண்களுக்கு படுகாயம், 7 பேருக்கு லேசான காயம் என மொத்தமாக 12 பேர் காயமடைந்து இருக்கின்றனர். எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் பயணம் செய்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது என முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகேயிருந்த சி.சி.டி.வி கேமிராவின் கண்காணிப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளின்படி, சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்த காவல்துறை அதிகாரிகளின் வேன், எதிர்திசையில் அதிவேகத்தில் பயணம் செய்துள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், சாலையில் சரியாக வந்துகொண்டு இருந்த கார், காவல் அதிகாரிகளின் வேன் எதிர்திசையில் தவறாக வருவதை கண்டு ஒதுங்கி செல்ல முயற்சித்த போது, கார் ஓட்டுநர் வாகனத்தை திரும்பி இருக்கிறார். 

வேன் அதிவேகத்தில் சென்றதால், காவல்துறையினர் வேன் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகே மின்சார கம்பிகளும் உள்ளது. இன்னும் சில அடி தூரம் வாகனம் இழுத்து செல்லப்பட்டு மின்சார கம்பத்தின் மீது இடித்திருந்தால் இன்னும் மோசமான விளைவுகளும் ஏற்பட்டு இருக்கும். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvannamalai Arani Police Vehicle Car Crash CCTV Footage Leaked Wrong Way Travelled by Police Van


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->