திருப்பூர் || பனியன் கம்பெனிகளில் குவியும் கால்பந்து ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் என்றால் அனைவரின் நினைவிற்கு வருவது பனியன் கம்பெனி. இங்கு ஏராளமான பனியன் கம்பெனி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் வழக்கத்தை விட அதிகமாக ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்று வரும். 

இங்கு உள்ள பனியன் நிறுவனங்களில் அரசியல் மற்றும் கோவில் திருவிழாக்களுக்குத் தேவையான டீ-சர்ட் பனியன்கள், ஐ.பி.எல். உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ரசிகர்கள் அணியக்கூடிய வகையில் ஒவ்வொரு அணியின் லோகோவுடன் டீ-சர்ட் பனியன்களும் தயார் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. 

தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாட்டு அணிகளில் விளையாட கூடிய வீரர்களின் ரசிகர்கள் கேரள வீரர் மற்றும்  வீராங்கனைகள் திருப்பூர் வந்து விளையாட்டு ஆடைகளை வாங்குவதில் அதிக ஆர்வத்தோடு உள்ளனர். 

அதேபோல், கத்தார் உலககோப்பை கால்பந்து போட்டியை பார்ப்பதற்கு செல்லும் கால்பந்து வீரர், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்கள், புதிய 'டீ-சர்ட்' கேட்டு திருப்பூருக்கு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, கேரளாவில் உள்ள விற்பனையாளர்களும், விளையாட்டு குழுவினரும், விளையாட்டு ஆடைகளை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். கேரள மாநிலத்தில் கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டு குழுக்கள் உள்ளிட்டவை அதிகம் உள்ளதால் அவர்கள் அனைவரும் பல்வேறு நாட்டு கால்பந்து அணிகளின் தீவிர ரசிகர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் அனைவருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பார்வையாளராக செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 'ஜெர்சி' என்ற விளையாட்டு டீ சர்ட் ஆடைகள் வாங்க திருப்பூருக்கு வருகின்றனர். அதேபோல், அவர்களின் விருப்பத்திற்கேற்ப திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் பனியன்களை தயாரித்து கொடுக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tirupur || food ball fans come to tirupur baniyan companies


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->