வற்றாமல் இருந்த ஏரி, காய்ந்து போன சோகம்.. ஆக்கிரமிப்புகளால் அரங்கேறிய கொடூரம்.. கோரிக்கையில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன், கடந்த வருடத்தில் பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பல குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கரைகளும் பலப்படுத்தப்ட்ட நிலையில், 10 குளங்களை தன்னார்வ அமைப்புகள் சீரமைத்து. கடந்த வருடத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைநீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து இருந்தது. 

இதனால் பறவைகளும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நிலையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள வேய்ந்தாங்குளம் பல தன்னார்வ அமைப்புகள் மற்றும் கல்லூரிகளால் தூர்வாரப்பட்டது. ஆக்கிரமிப்புகளை பலகட்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

இதனையடுத்து பெய்த மழையால் குளம் நிரம்பி ரம்மியமாக காட்சியளித்த நிலையில், கடந்த 2 மாதமாக தேவையான அளவு மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் குளம் வறண்டது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மற்றும் மதுபோதை ஆசாமிகள் வலம்வர துவங்கியுள்ளனர்.

தற்போது இக்குளத்தை பராமரித்து பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இக்குளத்தில் மொத்த பரப்பளவாக 86 ஏக்கர் உள்ள நிலையில், 20 ஏக்கர் பரப்பில் பேருந்து நிலையமும், 16 ஏக்கர் பரப்பில் மகளிர் சுயஉதவி கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனால் குளத்தின் பரப்பளவு 50 ஏக்கராக குறைந்துள்ள நிலையில், பறவைகளுக்காக விடப்பட்ட மீன்களை சமூக விரோதிகள் பிடித்து செல்லும் சூழலும், மழைநீர் குளத்திற்கு வரும் பாதையில் 2 இடங்களில் ஆக்கிரமிப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குளத்தினை மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீட்டெடுத்து தூர்வார வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirunelveli Veinthaan Kulam lake


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->