பகல் வேலையில் நோட்டம்.. இரவில் திருட்டு.. ஒரே பாட்டில் பணக்காரன் ஆக நினைத்த காவல் அதிகாரியின் கீழ்த்தரமான செயல்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியைச் சார்ந்த வீட்டில், பட்டப்பகலில் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருடு போனது. இந்த விஷயம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான தங்கதுரை கடந்த 10 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைரேகைகளை சேகரித்த நிலையில், இந்த கை ரேகைகளில் ஒரு ரேகை மட்டும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கை ரேகையுடன் ஒத்துபோயுள்ளது. இதனையடுத்து காவல் அதிகாரி பணியாற்றி வந்த ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள், காவலராக பணியாற்றி வந்த கற்குவேலின் கை ரேகையை உறுதி செய்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து கற்குவேலை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளனர். இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில், காவலர் அதிகாரியான பூபாலன் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடத்தில் காவல்துறைக்கு தேர்வாகி மணிமுத்தாறில் பயிற்சி முடித்து, ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ள கற்குவேல், பெரும்பாலும் இரவு நேர பணியை விரும்பி பார்த்து வந்துள்ளார். 

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, குறுக்கு வழியில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசையில் சுற்றிவந்த கற்குவேல் புதிதாக வீடு ஒன்றும் கட்டி வந்துள்ளார். மேலும், இவருக்கு சிறு வயதிலிருந்தே திருட்டுப் பழக்கம் இருக்கிறது என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பகல் வேளைகளில் ஓய்வு நேரங்களில் பூட்டப்பட்டு உள்ள வீட்டினை நோட்டமிட்டு வரும் காவல் அதிகாரி, இரவு வேளைகளில் காவல் அதிகாரி உடையுடன் திருட்டு வேளையில் ஈடுபட்டுள்ளார். 

மேலும், பார்ப்பவர்கள் பாதுகாப்பு பணிக்காக காவல்துறை அதிகாரி வந்துள்ளார் என்று நினைத்து செல்வதால் பெரும் வசதியாக திருட்டு தொழில் நடந்து வந்துள்ளது. திருட்டு தொழில் செய்து வந்து, தப்பித்தவறி கைரேகை சிக்கிவிடக்கூடாது என்பதை முன்னதாகவே நினைத்து சுதாரித்து காவல் அதிகாரியின் பட்டியலில் உள்ள கை ரேகையை மாற்ற முயற்சி செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து காவல் அதிகாரி கற்குவேலை நெல்லை மாநகர குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

அவரிடம் இருந்து 15 சவரன் நகைகள், ஒரு கார், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த நிலையில், அவரது கூட்டாளிகள் நான்கு பேருக்கும் காவல் துறையினர் வலைவீசியுள்ளனர். இது போன்ற காவலர்கள் இருப்பதால் மொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Police Officer Karuvel Arrest due to Night Time Thief work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->