நாமக்கல்லில் சோகம் - விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி.!
three students died in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் தரணிதரன், சதீஷ் மற்றும் கோகுல் உள்ளிட்டோர் உணவு இடைவேளை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, இடதுபுறம் திரும்பிய வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்காக, இருசக்கர வாகனத்தில் ஓட்டி வந்த கோகுல் வாகனத்தை திருப்பியுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோகுல் மற்றும் சதீஷ் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தரணிதரன் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த விபத்தை பார்த்த நபர்கள் மூவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு தரணிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு இடைவேளையின் போது வெளியில் சென்ற மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three students died in namakkal