பொதுமக்களுக்கு குட் நியூஸ் - அரசு பேருந்தில் இலவச பஸ் பாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயண சலுகைகளை அரசு அளித்து வருகிறது. ஊனத்தின் தன்மை,அளவு பற்றிய மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும் அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி வழங்கப்படும் இந்த இலவச பயணச்சலுகையில் பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு மூன்று மாத காலத்திற்கு பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-"மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை என உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்களை, 30.06.2024 வரை மூன்று மாத காலத்திற்கு பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் முகவரியையும், மற்றும் 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three month extension for free pass in govt bus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->