கருத்து வேறுபாடால், பெற்றெடுத்த குழந்தையை ரூ.3 இலட்சத்திற்கு விற்பனை செய்த தாய்.. கணவர் புகார்.!
Thoothukudi Wife Sales his Male Baby Rs 3 Lakh As Per Woman Husband Complaint Police Investigation
தனது குழந்தையை தாய் ரூ.3 இலட்சத்திற்கு விற்பனை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சார்ந்தவர் இராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 38). இவருக்கும், தூத்துக்குடியில் உள்ள கொத்தனார் காலனி பகுதியை சார்ந்த ஜெபமலர் (வயது 28) என்பவருக்கும், கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக ஜெபமலருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, ஜெபமலர் தனது கணவர் மணிகண்டனை பிரிந்து குழந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க தூத்துக்குடிக்கு வரவே, குழந்தை வீட்டில் இல்லை. குழந்தை எங்கே என ஜெபமலரிடம் கேள்வி கேட்கையில், அவர் மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன் அக்கம் பக்கத்தில் விசாரணை செய்கையில், ஜெபமலர் குழந்தையை விருதுநகரை சார்ந்த இடைத்தரகர் ஜேசுதாஸ் என்பவரின் மூலமாக, தூத்துக்குடியை சார்ந்த அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோருடன் சேர்ந்து ரூ.3 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அமபலமானது.
இதனையடுத்து, மணிகண்டன் தனது குழந்தையை மீட்டு தர வேண்டும் என தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தாய் ஜெபமலர் உட்பட 6 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thoothukudi Wife Sales his Male Baby Rs 3 Lakh As Per Woman Husband Complaint Police Investigation