படியில் நின்று பயணம் செய்து, தவறி விழுந்து உயிரிழந்த மூதாட்டி.! - Seithipunal
Seithipunal


விளாத்திகுளம் அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த மூதாட்டி, கீழே விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் துரைசாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர் ஜெயா. இந்த மூதாட்டி ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் பேருந்தில், விளாத்திகுளத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், பேருந்தில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த பேருந்து ஆழ்வார்நாயக்கன்பட்டி அருகே செல்கையில், ஜெயாவின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. படிக்கட்டில் நின்று செல்போனில் பேச அவர் முயற்சித்த நிலையில், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறி பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிய ஸ்ரீகிருஷ்ணா பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thoothukudi Vilathikulam Aged Woman Jaya Died During Bus Travel 17 April 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->