குடும்பத்தகராறில், தாய், 2 பெண் குழந்தைகள் தற்கொலை.. கோவில்பட்டியில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண்மணி தனது 2 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, ராஜிவ் நகரில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மனைவி முத்துமாரி. இந்த தம்பதிகள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதிகளுக்கிடையே குடும்ப தகராறு ஏற்படுவது வாடிக்கை என்று கூறப்படுகிறது. 

இதனால் தம்பதிகள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டுக்கொள்வது, பின்னர் சில நாட்கள் கழித்து கோபம் தணிந்து வாழ தொடங்குவதும் அவர்களிடையே வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று முத்துராமன் - முத்துமாரி இடையே கடுமையான குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மன உளைச்சலில் முத்துமாரி இருந்து வந்துள்ளார். இறுதியில் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த முத்துமாரி, தனது 2 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்துள்ளார். 

வெளியே சென்றிருந்த முத்துராமன் வீட்டிற்கு வந்து பார்க்கையில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் உயிரற்று இருப்பதை கண்டு அலறித்துடித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. 

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Kovilpatti Mother Suicide with 2 Girl Daughters Police Investigation 9 Oct 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal