இதுதான் சரியான நேரம்! ஜெயலலிதாவின் ஃபார்முலாவை கையில் எடுத்த எடப்பாடி..விஜய்யை இழுப்போம்..அப்போ விஜயகாந்த் கதிதான்! - Seithipunal
Seithipunal


சட்டசபைத் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் தான் — ஆனால், அரசியல் சூழல் ஏற்கனவே கொதித்து கொண்டிருக்கிறது.
அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை வேகமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து வருகிறார். திமுக ஆட்சிக்கு எதிராக கடுமையாகப் பிரச்சாரம் செய்து வருவதோடு, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கான விளக்கத்தையும் மக்களுக்கு அளித்து வருகிறார்.

இதனிடையே, கரூர் சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பின்னடைவு ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி திறந்தவெளியில் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தது கவனத்தை ஈர்த்தது.அதே நேரத்தில், நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரத்தின் போது ஒரு தொண்டரின் கையில் தமிழக வெற்றிக் கழக கொடி இருந்தது. அந்த கொடியை பார்த்த எடப்பாடி பழனிசாமி —“கொடி பறக்குது… பிள்ளையார் சுழி போட்டாங்க… எழுச்சி, ஆரவாரம்!” என்று உற்சாகமாக பேசி இருந்தார்.

அதிமுக மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனும் “தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்” என்று பேசியதால், அதிமுக-தவெக கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற சிக்னல் அரசியல் வட்டாரங்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருந்தாலும், திமுகவை வீழ்த்த அது மட்டும் போதாது என்று எடப்பாடி நினைக்கிறார். 2019 முதல் பல தேர்தல்களில் திமுக கூட்டணியை தோற்கடிக்க முயன்றும் முடியாத நிலை. அதனால் இப்போது எடப்பாடி புதிய யோசனையுடன் — விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க திட்டமிட்டு வருகிறார் என கூறப்படுகிறது.

ஏன் என்றால், இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடையே விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஆனால் எடப்பாடிக்கு அந்த வரவேற்பு குறைவு. புதிய வாக்காளர்களை ஈர்க்க முடியாமல் இருப்பது தான் அவரின் பெரிய சிக்கல். அதனால் தான், தவெகவை அணுகி கூட்டணிக்கு வரச் செய்வதே எடப்பாடியின் தற்போதைய அரசியல் உத்தி.

அது நடந்தால்?அதிமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்று பலரும் கணிக்கிறார்கள்.ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கணக்கில் இன்னும் ஒரு கோணம் உள்ளது. கூட்டணியில் இணைத்த பின், தவெகவை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துவிடலாம் என்ற ஜெயலலிதா கால ஃபார்முலாவை அவர் பின்பற்றப் போகிறார் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

2011ல் ஜெயலலிதா தேமுதிக உடன் கூட்டணி அமைத்து வென்றார். பின்னர் தேமுதிகவின் பல எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு மாறினர். அதே மாதிரி 5 ஆண்டுகளுக்குள் தவெகவையும் அதிமுகவில் கலக்கலாம் என்ற எண்ணம் எடப்பாடியிடம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால், இது விஜய்க்கு இருதலை வாள் போன்றது.ஏனென்றால், அதிமுக கூட்டணியில் இணைந்தால் — அவரது புதிய கட்சியில் சிலர் அதிருப்தியடைய வாய்ப்பு உள்ளது. அதேபோல், கொள்கை ரீதியாக எதிரியான பாஜகவுடன் இணைவது விஜய்யின் அரசியல் சுயமரியாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மறுபுறம், எடப்பாடி பழனிசாமி பாஜகவை புறக்கணித்தால் டெல்லி மேலிடம் அவருக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கலாம். அதிமுக உள்புறத்திலும் வேலுமணி, செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் அதிருப்தி அடையக்கூடும்.

இதனால் தான், அரசியல் வட்டாரங்கள் கூறுவது —“அதிமுக–பாஜக கூட்டணிக்குள் விஜய் சேர்வது கடினம். ஆனால், அதிமுக–தவெக கூட்டணி மட்டும் அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கும்” என்பதே.

இப்போது தமிழக அரசியலில் மையக்கேள்வி —2026 தேர்தலுக்கு முன், விஜய் எந்த முடிவை எடுக்கப் போகிறார்?அதிமுகவோடு கை கோர்ப்பாரா, அல்லது தனித்துப் போய்ச் சண்டையிடுவாரா?

அடுத்த மூன்று மாதங்கள் —தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான நாட்களாக இருக்கப் போகின்றன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is the right time Edappadi who has taken Jayalalithaa formula in hand let drag Vijay then Vijayakanth will be the one to blame


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->