நான்கடி மேலே தூக்கி, தரையில் ஓங்கி அடிக்கப்பட்ட குழந்தையின் அலறல்.!! திருவாரூரில் பதைபதைப்பு சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வைப்பூர் திருவாதிரைமங்களம் பகுதியை சார்ந்தவர் பாரதி மோகன் (வயது 27). இவரது மனைவி வேம்பு (வயது 23). இவர்கள் இருவரும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியாக இருந்து வரும் நிலையில், இருவரும் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய பாவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. 

இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரியவருகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேம்பு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஊழியபத்து கிராமத்தில் இருக்கும் தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். 

இதனைத்தொடர்ந்து இருதரப்பு உறவினர்களும் தம்பதிகளிடம் சமாதானம் பேசியுள்ளனர். இதன்பின்னர், கணவருடன் வேம்பு புறப்பட்டு, கணவரின் இல்லத்திற்கு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், நேற்று காலை நேரத்தில் தம்பதிகளுக்குள் சமைப்பது தொடர்பாக வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரதி மோகனிற்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. 

ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பாரதிமோகன் மனைவியை தாக்கிவிட்டு, பச்சிளம் குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, குழந்தையை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக பாரதிமோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Father Murder attempt his baby due to family problem police arrest


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal