ஜங்சன் பாக்ஸால் அரங்கேறிய சோகம்.. பெற்றோர்களே உஷார்.. பரிதாப பலியான பச்சிளம் குழந்தை.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை பாலவாக்கம் ஜே.ஜே பழங்குடியினர் குடியிருப்பில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி குப்பம்மாள். இவர்களுக்கு பிறந்த 8 மாதங்களே ஆன மதன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. 

இந்நிலையில், இவர்கள் வறுமை காரணமாக ஓலைக் குடிசையில் வசித்து வந்துள்ளனர். நேற்று இரவு நேரத்தின் போது மாரிமுத்து தனது அலைபேசியை சார்ஜ் போட்டுக்கொண்டு பயன்படுத்திக்கொள்ள, ஜங்ஷன் பாக்ஸை தரையில் வைத்துள்ளார். 

இந்த ஜங்ஷன் பெட்டிக்கு அருகில் மாரிமுத்துவின் 8 மாத குழந்தையான மதன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். செல்போன் பயன்படுத்திய கொண்டிருந்த மாரிமுத்து, அருகில் இருந்த குழந்தையை கவனிக்காமல் இருக்கவே, குழந்தையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. 

இதனால் குழந்தை தூக்கி வீசப்பட்டவே, மயக்கமடைந்த நிலையில் இருந்த குழந்தையை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மின்சாரம் தொடர்பான விஷயங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறும், அலட்சியத்துடன் செயல்பட வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Child baby died when father use Junction Electrical box Distain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal