அடுத்த அதிர்ச்சி - அஜித்குமாரின் தம்பி மருத்துவமனையில் திடீர் அனுமதி.!!
thirupuvanam ajithkumar brother navin kumar admitted hospital
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் நகை திருட்டு புகாரில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அவரை பைப்புகளை வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அஜித் குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகி நீதிபதிகளையே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அஜித்தையும், தன்னையும் போலீசார் கொடூரமாக அடித்ததாக அவரது சகோதரர் நவீன் குமார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாரும் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
thirupuvanam ajithkumar brother navin kumar admitted hospital