கட்டிய மனைவியை, கல்லூரி மாணவிக்காக பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரன்.! விசாரணையில் மேலும் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில்  உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி திடீரென காணாமல் மாயமாகியுள்ளார்.

மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், தனது மகளை காணவில்லை என்றும், அவரை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, உதவி கமிஷனர் பழனி, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், திருப்பத்தூரில் மனைவியை எரித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ள சத்தியமூர்த்தி என்பவருடன் நர்சிங் மாணவி மாயமாகி இருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்படி, திருப்பத்தூரில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தி வருபவர் சத்தியமூர்த்தி. இவருக்கு வயது 30 ஆகிறது. இவரின் மனைவி திவ்யாவை கடந்த 25ஆம் தேதி பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவர் மயங்கி உடன், அவர் உடலில் தீ வைத்து எரித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், 'எனக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டதால், இனி என்னால் திவ்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது. எனவே எனது மனைவியை பிரிந்து செல்ல மனமில்லாமல், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று பேசி இருந்தார்.

மாணவியுடன், 3 வயது குழந்தையையும் கடத்திச்சென்று தலைமறைவான சத்தியமூர்த்தியை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், எரித்து கொலை செய்யப்பட்ட திவ்யாவின் நெருங்கிய உறவினர் தான் இந்த மாணவி என்பதும், இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தால் திவ்வியாவை இருவரும் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thirupathun man run with college girl


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->