மேடையில் அட்டகத்திப்போல் பேசிய திருமாவளவன்! கொந்தளித்த வழக்கறிஞர்கள்! திருமாவுக்கு எதிராக பெரும் போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்..! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றம் அருகே நடந்த ஒரு சம்பவம் தற்போது தமிழக அரசியலையும் நீதித்துறையையும் அதிரவைத்திருக்கிறது.
விசிக தலைவர் திருமாவளவனின் கார் மீது வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் ஸ்கூட்டர் மோதியதாக கூறப்பட்டதில், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி வழக்கறிஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

வெளியான வீடியோவில், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது விசிகவினர் குழுவாக அடித்து தள்ளும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. ஸ்கூட்டர் சாலையில் தள்ளப்பட்டு சேதமடைந்தது.இந்த தாக்குதலுக்குப் பிறகு, “இது ஒரு அரசியல் சதி” என விசிகவினர் விளக்கமளித்தாலும், அவர்களது வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்ததால் சர்ச்சை மேலும் பெரிதாகியுள்ளது.

திருமாவளவன் தானே வெளியிட்ட வீடியோவில்,“என் கார் யாருடைய டூவீலரையும் மோதவில்லை; தவறான பிரச்சாரம் நடக்கிறது”
என்று கூறியிருந்தார். ஆனால், அதே நாளில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசிகவினர் அளித்திருந்த புகாரில், கார் மோதியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால், விசிகவினர் அளித்த புகாரே பொய்யானது எனும் சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இதற்கிடையில், விசிக தலைவரின் கார் டாஷ்போர்டு கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில், கார் ஸ்கூட்டரை மோதிய காட்சிதெளிவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.இதனால், “வீடியோ ஆதாரம் இருக்கையில் இன்னும் என்ன விசாரணை வேண்டும்?” என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திருமாவளவன் இதை சமாதானப்படுத்தும் விதமாக,“‘அடங்கமறு’ என்ற சொல் வன்முறையை தூண்டுவது அல்ல” என விளக்கம் அளித்துள்ளார்.ஆனால், சம்பவத்தின் போது அமைதியை நிலைநாட்ட வேண்டிய நிலையில், வழக்கறிஞர் மீது விசிகவினர் கும்பலாக தாக்கியது எந்த வகையிலும் நியாயமில்லை என சட்டவியலாளர் வட்டாரங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

இந்தச் சம்பவத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் தற்போது தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகவேல் செய்தியாளர்களிடம்,“திருமாவளவனுடன் வந்த குண்டர்கள் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை நீதிமன்ற வளாகத்துக்குள்ளே கூட தாக்கினார்கள்.பார் கவுன்சிலுக்குள்ளே கூட அவர் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், ஆனால் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”என கடும் கோபத்துடன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது —“தமிழகத்தில் காவல்துறை அரசு கையிலா? அல்லது குறிப்பிட்ட அரசியல் தலைவரின் கையிலா?பார் கவுன்சிலே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லையெனில், அது எதற்காக இருக்கிறது?வழக்கறிஞர்களுக்கான மன்றமாக இல்லாவிட்டால் பார் கவுன்சில் எங்களுக்கு தேவையில்லை.ஒருவரைத் தாக்கி, ‘அவன் முறைத்தான்; அதனால் நாங்கள் அடித்தோம்’ என்று ஒரு தலைவர் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது!”என்று வெடித்துள்ளார்.

தற்போது, வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடங்கியுள்ளனர்.“ராஜீவ் காந்திக்கு நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என்று அவர்கள் உறுதிபட அறிவித்துள்ளனர்.

பார் கவுன்சிலுக்குள்ளே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வழக்கறிஞர்கள் கோஷமிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் தமிழக அரசியலின் சூடான விவாதமாக மாறியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan spoke like a tyrant on stage Lawyers were outraged Lawyers launched a massive protest against Thiruma


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->