நான் என் சொந்த தொகுதியில் தான் போட்டியிடுவேன்: திருமாவளவன் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர், 

என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் நான் போட்டியிடுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. பா.ஜ.கவை விட்டு அ.தி.மு.க விலகினாலும், அ.தி.மு.கவை பா.ஜ.க விடுவதாக இல்லை. 

அ.தி.மு.கவை பலவீனப்படுத்தி மூன்றாவது இடத்திற்கு தள்ளும் முயற்சியில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். 

ஒரு சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணியில் போட்டியிடுகிறது. 

தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும் கட்சியின் தலைவர் திருமாவளவன், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க நேரில் சென்று மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan says contest own constituency


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->