வேலூரில் திருட வந்த இடத்தில் திருடன் செய்த காரியம்..! தெறித்து ஓடிய திருடன்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவதற்காக திருடன் வந்துள்ளான், ஆனால் அங்கு நகை, பணம் என்று எதுவும் கிடைக்கவில்லை அதனால், சமையலறைக்குள் புகுந்த திருடன் சமைக்க தெரியாமல் சமைத்து சாப்பிட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளன.

வாணியம்பாடியை சேர்ந்தவர் பாரூக் இவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருக்கிறார். சற்று பிரம்மாண்டமான பாருக்கின் வீட்டைப் பார்த்த திருடன் பெரும் சிரமப்பட்டு கதவின் பூட்டுகளை உடைத்து திருட சென்றுள்ளான்.

உள்ளே சென்றவன் ஆறு படுக்கையறைகள் கொண்ட வீட்டின் பிரம்மாண்டத்தைப் பார்த்ததும் “சீனா தானா” படத்தில் வரும் வடிவேலு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். உள்ளே எக்கச்சக்கமாக நகை, பணம் கிடைக்கும் என்ற நினைப்பில், சென்றவன், அங்கிருந்த பீரோக்களை தீவிரமாக அலசியுள்ளான்.

மிகுந்த எதிர்பார்ப்புகளோடு உள்ளே சென்ற திருடனுக்கு 6 படுக்கயறைகளைக் கொண்ட அந்த வீட்டின் பீரோக்கள் ஏமாற்றத்தை தந்தது. எந்த பீரோவிலும் ஒரு கிராம் தங்கமோ, பணமோ இல்லை. ஆத்திரத்தில் பீரோவிலிருந்த துணிகள், பொருட்கள் எல்லாவற்றையும் வாரி இறைத்திருக்கிறான் திருடன்.

மிகவும் கஷ்டப்பட்டு நேராக சமையலறைக்குச் சென்றவன், அங்கிருந்த பாத்திரங்கள், டப்பாக்களை உருட்டிப் புரட்டி சேமியாவையும் மக்ரோணியையும் கண்டுபிடித்திருக்கிறான். பால் காய்ச்சும் பாத்திரத்தை எடுத்து இரண்டையும் கொட்டி, கைப்பிடி மிளகாய்த்தூளை போட்டு வேகவைத்து சுடச்சுட வாயில் வைத்தவன் காரம் தாங்காமல் அப்படியே போட்டுவிட்டு வெறுத்து, நொந்து ஓடியிருக்கிறான். தகவலறிந்து வந்த போலீசார் ஓடிய திருடனை தேடிவருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thief does stupid thing in robbery place


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->