ஆண்களுக்கு பாதுகாப்பில்லை.. வாலிபர்களிடம் அத்துமீறிய இளம்பெண்கள்..மதுபோதையில் சில்மிஷம்!
There is no safety for men Young women who misbehave with youthsA mess under the influence of alcohol
தனியாக சென்ற வாலிபர்களை கட்டிப்பிடித்து அவர்களுடன் வெளிப்படையாகவே உல்லாசமாக முத்தமிடுவது போன்ற செயல்களில் இளம்பெண்கள் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பனியன் தொழில் நகரமாக கருதப்படும் திருப்பூரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. நகரின் மத்திய பிரதான பகுதியான திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக பாலியல் தொழில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.அதுமட்டுமல்லாமல் அந்த கும்பல் காசு பறிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக திருப்பூர் காமாட்சி அம்மன் கோவில் வீதி பகுதிகளில் விபச்சார பெண்கள் மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் ஆண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுவதும், பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ந்த வண்ணமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடை வாசலில் இளம் பெண்கள் சிலர் மது அருந்திவிட்டு போதையில் தனியாக சென்ற வாலிபர்களை கட்டிப்பிடித்து அவர்களுடன் வெளிப்படையாகவே உல்லாசமாக முத்தமிடுவது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அருகிலுள்ள மறைவான சந்து பகுதிக்கு அழைத்துச் செல்லும் செயல்களில் ஈடுபடுவதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பகுதியில் சுற்றித்திரியும் விபச்சார கும்பலையும், காசு பறிக்கும் கும்பல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், காவல்துறை தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
There is no safety for men Young women who misbehave with youthsA mess under the influence of alcohol