தவெக உடன் பேச்சுவார்த்தை இல்லை –அப்படியே ஒதுக்கி தள்ளிய எடப்பாடி.. வேண்டாமே வேண்டாம்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கலக்கங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் நடுவே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்று நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இவரின் இந்த திடீர் மறுப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களாக, நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்ற செய்திகள் வேகமாக பரவியிருந்தன. மேலும், விஜய்க்கு 40-க்கும் மேற்பட்ட இடங்களும், துணை முதல்வர் பதவியும் வழங்கும் வகையில் எடப்பாடி திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியானது. அதிமுக சார்பாக விஜயுடன் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்தன என்ற வதந்திகளும் பரவின.

மேலும், குமாரபாளையம் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி,“அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம்”
என்று கூறியபோது, கூட்டத்தில் சிலர் தவெக கொடியை உயர்த்தியதை பார்த்து,“கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே...”என்று சிரித்தபடி கூறியதும், அந்த கூட்டணிக்கான ஆரம்ப அடையாளமாக பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது திடீரென “தவெக உடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை” என கூறியிருப்பது, எடப்பாடியின் நிலைமாற்றத்திற்கான காரணங்கள் குறித்து பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் கூறும் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

விஜயின் அரசியல் செல்வாக்கு குறைவு:எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு போதிய மக்கள் செல்வாக்கு இல்லை, அவர் மீது ரசிகர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று நம்புகிறார். வாக்கு பெட்டியில் அதனால் பெரும் தாக்கம் ஏற்படாது என அவர் கருதுகிறார்.

இட ஒதுக்கீடு பிரச்சனை:விஜயிடம் கூட்டணி கோரினால், அவர் அதிக இடங்களை கேட்பார் என்ற அச்சம் அதிமுக தலைமைக்கு உள்ளது. அதிமுக தான் பெரிய கட்சி என்பதால், “நாம் அவரிடம் இறங்கி செல்ல முடியாது” என்கிற மனநிலை எடப்பாடிக்கு உள்ளது.

தவெக அமைப்பு பலவீனம்:விஜயின் கட்சி இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது. அமைப்பு ரீதியாக வலுவாக இல்லை. அதனால் தேர்தலில் வாக்கு அளவில் பெரிய பங்களிப்பு செய்ய முடியாது என எடப்பாடி நம்புகிறார்.

அதிமுக உள்கட்சி ஆய்வு முடிவு:அதிமுக தலைமையிலிருந்து நடத்தப்பட்ட ஒரு உட்கட்சி சர்வேயில், தவெக உடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவின் அடிப்படை வாக்காளர்கள் குழப்பமடைவார்கள் என்ற முடிவு வந்ததாக கூறப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, விஜயுடன் தொடர்புகளை நிறுத்தி விட தீர்மானித்துள்ளார் எடப்பாடி.

கட்சி அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கம்:அதிமுக தலைவர்கள், “முதலில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துங்கள், புதிய கூட்டணிகளால் வாக்காளர்கள் குழப்பமடையாதபடி பாருங்கள்” என்று எடப்பாடிக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியின் திடீர் மறுப்பு, அதிமுக – தவெக கூட்டணிக்கான வாய்ப்பை மூடிவிட்டது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், விஜய் தரப்பிலிருந்தும் எந்தவித எதிர்வினையும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இம்முடிவு எதிர்காலத்தில் தமிழக அரசியலின் கூட்டணிக் கணக்குகளை பெரிதும் மாற்றும் என வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is no negotiation with Tvk Edappadi just pushed him aside No way Is there a reason behind this


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->