சுத்தியலில் ரத்தக்கறை.. கொடூரமாக அரங்கேறிய கொலை.. தேனியில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பென்னிகுயிக் நகர் பகுதியை சார்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அருண்குமார் (வயது 34). இவர் தேனி - மதுரை சாலையில் சன்னாசி என்பவருக்கு சொந்தமாக உள்ள இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வங்கிக்கணக்கில் பணம் எடுத்து வர நேற்று வங்கிக்கு சென்றுள்ளார். 

வங்கியில் இருந்து ரூ.22 இலட்சம் பணத்தை எடுத்துவிட்டு, பின்னர் நிறுவன உரிமையாளரிடம் பணம் கொடுக்காமல் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து இவர் மாயமானது குறித்து சக ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் அருண்குமாரின் அலைபேசி சிக்னலை சோதிக்கையில், அங்குள்ள மலைகரட்டு அடிவார பகுதியில் துண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சோதனை செய்ததில், அருண்குமார் மலையடிவாரத்தில் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். இவரது உடலுக்கு அருகே இரத்தக்கறை படிந்த சுத்தியல் மற்றும் அலைபேசி இருந்துள்ளது. அருகிலேயே அவரது இரு சக்கர வாகனமும் இருந்துள்ளது. காவல் துறை அதிகாரிகள் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அருண்குமார் வங்கியில் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்டு மர்ம கும்பல் இக்கொலையை அரங்கேற்றி, பணத்தை திருடி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Murder case police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal