சாலை மேம்படுத்தும் பணி...எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி வைத்தார் !
The road improvement work was inaugurated by the opposition leader
வில்லியனூர் எஸ்.எம்.வி.புரம் மேற்கு பகுதியில் ரூ. 30 லட்சம் செலவில் சாலை மேம்படுத்தும் பணி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கு பகுதியில் பக்க வாய்க்காலுடன், சிமெண்ட் சாலை மேம்படுத்தும் பணிக்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 29 லட்சத்து 37 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்படும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை முருகர் கோவில் அருகில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சாலை மேம்படுத்தும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உரக்கடை சரவணன், செந்தாமரைக்கண்ணன் ரவி, பெருமாள், முருகையன், முருகர் கோவில் தலைவர் ஆறுமுகம், பழனி ராஜா, வி.கே.எஸ். பாண்டியன், 0ராஜேந்திரன், பரமநாதன், ராமகிருஷ்ணன் ராஜசேகர், அரிசிக்கடை பழனி, பிஎஸ்என்எல் பழனி, பாபு, சிவக்குமார், ஸ்ரீதர், உரக்கடை ரவி, திருவேங்கடமணி, சுதாகர், பைனான்ஸ் ராஜா, கால்நடைத் துறை சங்கர், சரவணன், ஏழுமலை, ஆசிரியர் கிருஷ்ணராஜ், ரவி, பழனியப்பன், ஸ்பின்கோ முருகையன், சேகர், மாணிக்கம், கேவிஆர் வேலாயுதம், சுந்தரம், ஆசிரியர் சேகர், பூக்கடை பாரதி, கௌதம், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொமுச தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் காசிநாதன், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சுப்பிரமணியன், ஏழுமலை, கிளைக் கழக நிர்வாகிகள் சபரிநாதன், ராஜி, மிலிட்டரி முருகன், முத்துப்பாண்டி, கலைமணி, தட்சிணாமூர்த்தி, ராஜேந்திரன், கார்த்திகேயன், ராமஜெயம், முருகையன், ரகு, கோபி, கோதண்டம், சங்கர், ஜெயக்குமார், தமிழ் வேந்தன், விந்தியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
English Summary
The road improvement work was inaugurated by the opposition leader