பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்..முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போர்க்கொடி!
The Public Works Minister should resign Former Chief Minister V Narayanasamy
பொதுப்பணித்துறை அமைச்சர் சிபிஐ வழக்குக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்- இல்லையெனில் அவரது வீடு முற்றுகையிடப்படும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கமிஷனாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் லஞ்சம் கொடுத்த கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் இளமுருகன் ஆகிய மூன்று பேர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.
மேலும் தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.65 லட்சமும், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.8 லட்சமும் என மொத்தம் ரூ.73 லட்சத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.மேலும் புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்பந்தத்திற்கு சாதகமாக செயல்பட லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகனை கைது செய்துள்ளது CBI!ரூ.7.44 கோடி சாலை ஒப்பந்த பணிக்கு சாதகமாக செயல்பட
ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்ட நிலையில், அதில் ரூ.2 லட்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.
இந்தநிலையில் இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் சிபிஐ வழக்குக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்- இல்லையெனில் அவரது வீடு முற்றுகையிடப்படும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீட்டில் ரூ.63 லட்சம் சி.பி.ஐ பறிமுதல் செய்துள்ளனர்.
பாரபட்சம் இன்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.பெரிய, பெரிய தலைகள் மாட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதிவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
முதலமைச்சரின் ஈடுபாடும் இதில் உள்ளது,இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களில் கொள்ளையடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் காங்கிரஸ்,திமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியே தூக்கி வீசியது அராஜகம்.
ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
English Summary
The Public Works Minister should resign Former Chief Minister V Narayanasamy