போக்குவரத்துறையில் பண மோசடி வழக்கை மீண்டும் கையில் எடுக்கும் கட்டாயத்தில் காவல்துறை! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகளை விரிவாக விசாரிக்க போகும் தமிழக காவல்துறை!

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து தற்பொழுது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டார் என சென்னை காவல் ஆணையர் இனம் புகார் அளித்திருந்தனர். 

புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி அவரது நண்பர் பிரபு சகாயராஜன் தேவ சகாயம் அன்னராஜ் மீது நம்பிக்கை மோசடி ஏமாற்றுதல் கொலை மிரட்டல் உட்பட பிரிவினக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கை சென்னை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வருகிறது. 

தன் மீது தான் இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவானது உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்பொழுது காவல்துறையினர் தரப்பில் உச்ச நீதிமன்ற உத்தரவின் இம்மூன்று வழக்குகளின் லோன் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The police are forced to take up the money fraud case against Senthil Balaji


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal