500 ரூபாய் பணம் எடுத்த மனைவியை வெட்டி கொன்ற முதியவர்.,! தூத்துகுடியில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


500 ரூபாயை மனைவி எடுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம்,  குலசேகரன்பட்டிணத்தை சேர்ந்தவர் சுடலை (70). இவருக்கு திருமணமாகி முத்தம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து  வேறுபாட்டால் இருவரும் ஒரே காம்பவுண்டில் தனி தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவதன்று  முத்தமாள் வீட்டிற்கு சென்ற சுடலை தனது 500 ரூபாய் பணத்தை எடுத்ததாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.  ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர் வைத்திருந்த அரிவாளால் முத்தமாளை வெட்டியுள்ளார்.

இதனால் முத்தமாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே  இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் முத்தமாளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனை அடுத்து சுடலை மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The old man who hacked his wife to death


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal