அலங்காநல்லூரின் மலையடிவாரத்தில் வரப்போகும் ஜல்லிக்கட்டு அரங்கம்; முதல்கட்ட பணி 16 ஏக்கரில் நடைபெற உள்ளது! - Seithipunal
Seithipunal


அலங்காநல்லூரில் அமையவிருக்கும் ஜல்லிக்கட்டு அரங்கானது வருகின்ற 2024 ஆம் ஆண்டு பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு வரப்போகிறது!

தமிழர்களின் வீர விளையாட்டுக்கான ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வளாகம் அமைக்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

முதல் கட்டமாக நிலம் தேர்வு செய்யப் பணியானது நடைபெற்று வந்த நிலையில் அலங்காநல்லூர் அடுத்த குட்டிமேய்கிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழக்கரை கிராமத்தின் மலை அடிவாரத்தில் சுமார் 66 ஏக்கர் நிலத்தில் 16 ஏக்கரில் முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு அரங்கம் ஆனது அமைக்கப்பட திட்டமிட்டப்பட்டுள்ளது.

அந்த இடத்தை அமைச்சர் ஏ.வ வேலு மற்றும் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு உறுதி செய்துள்ளனர். மேலும் பணிகளைப் பொருத்தவரை முன்கூட்டியே விரைந்து முடிக்க கூடிய ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டவர்கள் என எதிர்பார்க்கிறோம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், எம்எல்ஏ வெங்கடேசன் ,பொதுப்பணித்துறை, வருவாய் துறை ,நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The jallikattu arena to be built in alanganallur will be completed in 2024


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal