சாம்சங் தொழிலாளர்கள் கைது எதிரொலி!...சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர விசாரணை! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும்  தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து,  தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தபட்டது.

முதலில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், பின்னர் சங்கம் அமைக்கும் கோரிக்கையை தவிர்த்து பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக ஆலை நிர்வாகம் வாக்குறுதி அளித்தது

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The echo of the arrest of samsung workers urgent hearing today in chennai high court


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->