தமிழகத்தில் ஒரு கோடியே 66 லட்சம் பேர் வாக்காளர் எண்னுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒரு கோடியே 66 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் எண்ணை இணைத்திருப்பதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் தங்களுடை ஆதார் எண்ணுடன் வாக்காளர் எண்ணை இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், வீடு வீடாக சென்று ஆதார் மற்றும் வாக்காளர் எண்களை பெற்று இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் 6பி படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும், ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்திருந்தார். 

மேலும் தேசிய வாக்காளர் சேவை அமைப்பான என்.வி.எஸ்.பி. போர்ட்டல் (https://www.nvsp.in), வாக்காளர் சேவை எண் 1950 போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம் எமவும், 6பி படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை மட்டுமே கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஒரு கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்களுடைய ஆதார் எண்ணுடன் வாக்காளர் எண்ணை இணைத்துள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர் இருப்பதாகவும், அதில் ஒரு கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்களுடைய ஆதார் எண்ணுடன் வாக்காளர் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 26.78 சதவீதம் ஆகும்.

மேலும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Chief Electoral Officer has informed that one crore 66 lakh people have linked Aadhaar number with voter numbe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->