விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்.! வேன் மோதி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் வேன் மோதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்திநகரில் உள்ள கள்ளிக்குடி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பெயிண்டர் செந்தில்குமார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன் பொன்ராம் (3). 

இந்நிலையில் இன்று காலை சிறுவன் பொன்ராம் வீட்டின் முன்பு சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மில் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் எதிர்பாராதவிதமாக திடீரென சிறுவன் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் வளர்த்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சமயநல்லூர் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy died after hit by a van in madurai


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal