புலவர்'திரு.கா.அப்பாதுரை மற்றும் மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பிறந்ததினம்!.
The birthday of the scholar Mr KA Appadurai and the king of melodious music Mr MS Viswanathan
மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பிறந்ததினம்!.
பழம்பெரும் இசையமைப்பாளரான திரை இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.
1953ல் வெளிவந்த ஜெனோவா படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்துள்ளார்.
கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை தொட்ட மெல்லிசை மன்னர் தனது 87வது வயதில் 2015ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி மறைந்தார்.

பன்மொழிப் புலவர்'திரு.கா.அப்பாதுரை அவர்கள் பிறந்ததினம்!.
கா. அப்பாதுரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.
அப்பாதுரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.
English Summary
The birthday of the scholar Mr KA Appadurai and the king of melodious music Mr MS Viswanathan