தமுமுகவின் 31 ஆம் ஆண்டு துவக்க தினம்...கம்பம் நகர தமுமுக சார்பாக இரத்ததான முகாம்! - Seithipunal
Seithipunal


தமுமுகவின் 31 ஆம் ஆண்டு துவக்க தினம் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கம்பம் நகர தமுமுக சார்பாக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை இரத்தவங்கியுடன் இணைந்து கம்பம் சிக்னல் அருகில் இரத்ததான முகாம் நகரத் தலைவர் அன்சாரி கம்பம்  தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மருத்துவஅணி செயலாளர் யூசுப் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இராமகிருஷ்ணன் எம்எல்ஏ, கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜி.ஜெய்னுலாபுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இரத்ததான முகாமை துவக்கி வைத்தனர்.

மாவட்ட துணைத் தலைவர் சலீம் பாட்ஷா, மாவட்ட ஐபிபி செயலாளர் ஹக்கீம்,நகர மமக செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் ஜெய்லானி, தமுமுக செயலாளர் நிஜாத் அஹமது, அம்ஜத் கான் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இந்நிகழ்வில் சமுதாயத் தலைவர் O.R.குமரேசன், கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் செயலாளர் ஹாஜி.நாகூர் மீரான், பொருளாளர் ஷபியுல்லாஹ், துணை தலைவர் அப்துல் சமது, துணை செயலாளர்கள் I.சர்புதீன், அப்துல் காதர், வின்னர் அலீம், கம்பம் வடக்கு நகர திமுக செயலாளர் M.C.வீரபாண்டியன், கம்பம் தெற்கு நகர திமுக பொறுப்பாளர் C.பால்பாண்டி ராஜா, கம்பம் மஸ்ஜித் இலாஹி துணை செயலாளர் முகம்மது சலீம், திமுக அயலக அணி தலைவர் முகமது சதக், கம்பம் சாதிக் MC, கம்பம் அதாயி அரபிக்கல்லூரி முதல்வர் மௌலவி.தாரிக் அஹமது ஆலிம் பிலாலி, விவசாய சங்க பொறுப்பாளர் அண்ணன் பொன் காட்சிகண்ணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் யாசர் அரபாத், மதிமுக மாவட்ட செயலாளர் VSK இராமகிருஷ்ணன், தேனி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர்  ராஜா முகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் லெனின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கம்பம் நகர செயலாளர் சேட், கம்பம் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் செந்தில் குமார், ஜாக் மாவட்ட தலைவர் யாசர் அரபாத், துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனர் வேல்பாண்டி, நன்செய் ஒருங்கிணைப்பாளர் பசுமை செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட தலைவர் முகமது ரபீக், தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் ஹபிபுல்லாஹ், மாவட்ட துணை செயலாளர்கள் சிராஜ்தீன், மௌலவி.முகம்மது ஹனீபா பத்ரி, மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் நியாஸ் அஹமது, கூடலூர் நகர மமக செயலாளர் ஹைதர் அலி, உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாரூதீன், சின்னமனூர் நகர தலைவர் முகமது கோயா, தேவாரம் கிளை தலைவர் ஆசிக் குதா, கம்பம் நகர நிர்வாகிகள் முகமது ஆசிக், சித்தீக் மெதார்ஷா, ஷாஜகான், கமர்தீன், சபீக் ராஜா, ஆசிக் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The 31st anniversary celebration of Thamumuk Blood donation camp organized by Thamumuk in Kambam city


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->