படிப்பை பாதியில் துறந்து, காதலனை தேடி கரம்பிடித்த பெண்மணி.. கண்ணீரில் பெற்றோர்கள்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி வருடம் பயின்று வந்த மோகனப்பிரியா என்ற பெண்மணி, அலைபேசியில் எப்போதும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி இருந்துள்ளார். இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த 22 வயதான சுந்தர் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் நட்பாக பழகிய நிலையில், காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், அந்த வாலிபர் சுந்தர் குடியாத்தத்தை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், பெங்களூரில் சமையல் செய்யும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. 

காதலன் மேல் வைத்துள்ள கண்மூடித்தனமான அன்பு காரணமாக, கடந்த 15 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மோகனப்பிரியா, காதலனைத் தேடிச் சென்றுள்ளார். இருவரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்ட நிலையில், தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிய மகளை காணவில்லை என்று மோகனாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவே, காதல் ஜோடிகளை கண்டித்துள்ளனர். பின்னர் குடியாத்தத்திற்கு சென்று பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதனையடுத்து குடியாத்தம் காவல் நிலையத்தில் மற்றொரு புகாரை பெற்றோர்கள் பதிவு செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை செய்கையில், இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காவல் நிலையத்திற்கு வந்த மோகனப்பிரியா, நான் மேஜர் என்றும், நான் எனது காதலனுடன் தான் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களது பெற்றோரிடமிருந்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் மனு அளித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்து, கண்ணீருடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur girl Married Gudiyatham Boy Love Parents feeling sad about his Future


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal