'டமில்நாடு' வேண்டாம்., தமிழ்நாடு தான் வேண்டும்.! முக்கிய வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், "தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பழமையான தனிச்சிறப்பு கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் சிறந்த அடையாளம் ழகரம் ஆகும்.

தமிழ்நாடு என்பதை TAMIL NADU என்ற ஆங்கிலச்சொல் உச்சரிக்கும் போது அது டமில் நாடு என வருகிறது. எனவே அதனை ஆங்கிலத்திலும் THAMIZH NADU என்று குறிப்பிட்டால் தமிழ்நாடு என்ற உச்சரிப்பு சரியாக இருக்கும்.

TAMIL NADU என்பதற்கான ஆங்கில வார்த்தையை THAMIZH NADU என மாற்றி மாற்றி உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த எம் எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, "வடமாநிலத்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கும் ழகரம் வராது என்று தெரிவித்தனர்.

அதற்கு மனுதாரர் தரப்பில், தமிழ்மொழியின் பெருமையை சிறப்பு ழகரம் தான். பிற மாநிலத்தவர்கள் அந்த சிறப்பை ஏன் நாம் எடுக்க வேண்டும். என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தமிழ் சிறப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலர் ஆகியோர் மனுதாரரின் மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THAMIZH NADU NAME ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->