காமராஜரை போற்றிட "தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பம்.. விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தனது அரசியல் பயணத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அம்பேத்கர் பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கினார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்று சென்னை அடுத்த பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் மக்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்களை விஜய் ஆலோசனை செய்ததோடு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான இரவு பள்ளி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் "தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் "தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த பத்திரிகை செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy Vijay Pailagam launching on Kamaraj birthday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->