தீவிரவாதத்தை இந்திய மண்ணில் இருந்து வேரோடு அழிக்க வேண்டும்..நாராயணசாமி ஆவேசம்!
Terrorism must be rooted out from Indian soil Narayanasamy
நாம் அரசியல் பாகுபாடு இல்லாமல் நாட்டை காப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு தீவிரவாதத்தை இந்திய மண்ணில் இருந்து வேரோடு அழிக்க வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்-நாராயணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர்-நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி காஷ்மீர் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் பகல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் அன்று மாலை 3 மணி அளவில் தீவிரவாத கும்பல் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுற்றுலாப் பயணிகளை சுட்டதில் 26 பேர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 20 பேருக்கு மேல் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஒரு கோரச் சம்பவம். இது இந்திய நாட்டை உலுக்கி இருக்கிறது. லஷ்கர் இ தொய்பா அதனுடைய குழுக்கள் அதனுடைய கிளை குழுக்கள் போன்றவைகள் எல்லாம் தொடர்ந்து பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்று பாகிஸ்தான் அரசினுடைய ஆசியோடு அவர்கள் இந்திய நாட்டிற்குள் நுழைந்து காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து சுற்றுலா பயணிகளையும் காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும் அப்பாவி முஸ்லிம்களையும் கொல்கிறார்கள்றார்கள். இது தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
புல்வாமா பகுதியில் இராணுவ வீரர்கள் தங்களது பணிக்கு சென்ற சமயத்திலே கண்ணிவெடிகள் வைத்து அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மத்திய அரசானது இதற்கு கண்டனம் தெரிவித்தது பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் அவரது அமைச்சரவையும் பாகிஸ்தான் உடைய தீவிரவாதத்தை ஒருபோதும் இந்திய மண்ணிலே அனுமதிக்க மாட்டோம் என்று அறிக்கை விட்டார்கள். இந்த பாகிஸ்தானால் பயிற்சி பெறப்பட்டு இந்தியாவிற்கு வந்து இந்திய எல்லையில் நம்முடைய அப்பாவி மக்களை சுட்டுக் குவிக்கின்ற இந்த தீவிரவாத கும்பலுக்கு எதிரான அமெரிக்க ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகள் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.
அந்த தீவிரவாதிகளை கண்டிப்பாக நாங்கள் ஒழித்துக் கட்டுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்திய ராணுவம் வீரர்கள் ராணுவ படைத்தளபதிகள் எல்லாம் நடவடிக்கை எடுத்து இன்றைய தினம் விடியற்காலையிலே சுமார் 12 மணி அளவில் நம்முடைய விமானப்படை அதிகாரிகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்திய பகுதிகளிலும் மற்றும் பாகிஸ்தானில் உள்ளையும் சென்று எந்தெந்த பகுதிகளில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் இருக்கின்றன என்பதை குறியீட்டு சுமார் 9 இடங்களில் அவைகளை அழித்திருக்கிறார்கள். இது மிகவும் பாராட்டுக்குரியது. நம்முடைய இந்த ராணுவத்தின் வீரதீர செயலை நாம் அனைவரும் தொடர்ந்து பாராட்ட வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த மத்திய அரசிற்கும் பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்கள்.
இந்தியா எந்த காலத்திலும் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ளாது இந்திய நாடு அமைதியை விரும்புகின்ற நாடு என்பதை தொடர்ந்து பிரதமர் நேரு காலத்தில் இருந்து தலைவர் ராஜீவ்கந்தி அன்னை இந்திரா காந்தி மன்மோகன் சிங் காலம் வரை நாம் நிரூபித்து காட்டி இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக நம்முடைய ராணுவ வீரர்கள் உயிரை துச்சம் என மதித்து நம் நாட்டில் தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்பதற்காக அந்த தீவிரவாத கும்பல்களை அவர்களுடைய பதுங்கும் இடங்களையும் அவர்களின் பயிற்சி முகாம்களையும் தகர்த்து எறிந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தலைவணங்கி நம் ராணுவ வீரர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முழுமையான ஆதரவு இந்திய நாட்டு மக்கள் நம் ராணுவத்திற்கு கொடுப்பார்கள் என்று நான் கூறிக் கொள்கிறேன். அதேபோல அதற்கு முழுமையாக ஆதரவு கொடுத்த நம் பிரதமர் அவர்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது இக்கட்டான ஒரு காலம் இப்போது ஒற்றுமையை நாம் காப்பாற்ற வேண்டும். ஆகவே நாம் அரசியல் பாகுபாடு இல்லாமல் நாட்டை காப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு தீவிரவாதத்தை இந்திய மண்ணில் இருந்து வேரோடு அழிக்க வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்-நாராயணசாமி கூறியுள்ளார்.
English Summary
Terrorism must be rooted out from Indian soil Narayanasamy