#Breaking: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர்.. சிறுமியின் உறவினர்கள் தரமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு ஆபாச படங்களை செல்போனில் அனுப்பிய காமுக திமுக பிரமுகரை சிறுமியின் உறவினர்கள் வீடுபுகுந்து வெளுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

திமுக தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மற்றும் நெசவாளர் பிரிவு துணை செயலாளர் செல்வபாண்டி. இவர் சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே சிறுமியொருவர் வசித்து வந்து இருக்கிறார். 

இந்நிலையில், காமுகன் திமுக பிரமுகர் செல்வபாண்டி, சிறுமியின் அலைபேசி எண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்பியிருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திமுக பிரமுகர் செல்வபாண்டியின் இல்லத்தில் அதிரடியாக நுழைந்து அவரை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்ற நிலையில், இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Sankarankoil DMK Supporter Selvapandi Sexual Torture to Child girl 23 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->