தற்காலிக கூடுதல் பெட்டிகள் இணைப்பு! - தெற்கு ரெயில்வே
Temporary additional coaches attached Southern Railway
தெற்கு ரெயில்வே தற்காலிக ரெயில் பேட்டி இணைப்பு குறித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டதாவது,"மதுரையிலிருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.22624), இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் டிசம்பர் 27-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22623), நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வரும் டிசம்பர் 28-ந்தேதி வரையிலும் கூடுதலாக 3-வது வகுப்பு ஏ.சி. எக்கனாமிக் பெட்டி-3, படுக்கை வசதி பெட்டி-1 என மொத்தம் 4 பெட்டிகள் தற்காலிகமாக இணைத்து இயக்கப்படவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Temporary additional coaches attached Southern Railway