பட்டுக்கோட்டையில் பரபரப்பு.. தீண்டாமை சர்ச்சையால் கோவிலுக்கு சீல்..!! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலம்பள்ளம் கிராமத்தில் உள்ள மழை மாரியம்மன் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் பட்டியல் இன சமூகத்தினர் கோயிலுக்குள் வரக்கூடாது எனக் கூறி தடை விதித்தனர். இதனை அடுத்து பஞ்சாயத்து தலைவர் உமாராணி முயற்சியில் பட்டியல் சமூக மக்கள் ஒன்று திரண்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை ஆர்டிஓ மற்றும் காவல் துறையினர் உதவியுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் சாமி குத்தம் ஆகிவிட்டது, கோயிலில் தீட்டுப்பட்டு விட்டது என கூறி பட்டியல் இன மக்களுக்கு வேலை கொடுக்க கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பட்டியலின மக்கள் வெளியூரில் சென்று வேலை செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 48 நாள் மண்டபடியில் தங்களுக்கும் ஒரு நாளில் சாமி கும்பிட்டு அபிஷேகம் செய்வதற்கான தேதியை ஒதுக்கி கொடுங்கள் என மீண்டும் வட்டாட்சியர், டி.எஸ்.பி, உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளிடமும் மனு அளித்தனர்.

அதன் பேரில் 2 நாட்கள் தொடர்ந்து தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் கிராம கமிட்டி தலைவர் பாலசுப்பிரமணியன் மட்டும் வந்து அந்த நடைமுறைக்கு சாத்தியமில்லை எனவும், ஊர் மக்கள் அனைவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பட்டுக்கோட்டை நகராட்சி கவுன்சிலர் சதாசிவகுமார், ஆலப்பள்ளம் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி ஆகியோர் உடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாலும் கோவிலை போலீசார் கட்டுப்பாட்டில் எடுத்து பூட்டியுள்ளனர்.  இருதரப்பிற்கும் இடையே பிரச்சனைகள் சமூக தீர்வு எட்டும் வரை கோவில் பூட்டப்பட்டு இருக்கும் என வருவாய்த்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆலப்பள்ளம் கிராமத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temple was sealed as ST people not allowed inside temple


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->