காவல்நிலையம் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்., திருப்பூரில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


காதலன் ஏமாற்றியதால் காவல்நிலையம் முன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவடம், பல்லடம் பகுதியில் வசித்து வருபவர் திவ்யா. இவர் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் பழகி வந்துள்ளார். பார்த்திபன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை அவருடன் உல்லாசமா இருந்துள்ளார்.

பல முறை திவ்யா பார்த்திபனிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதனால், அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையம் முன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  உடனே அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teen attempts suicide in front of police station


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal