#வேலூர் || மாணவிகளை தாக்கிய விவகாரத்தில் ஆசிரியை சஸ்பெண்ட்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா இளவம்பாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்த தீபலட்சுமி என்பவர் வீட்டுப்பாடம் எழுதாததால் அடித்துள்ளார். இந்த சம்பவத்தில் 3 மாணவிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட அதோடு ஆங்கில ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த விரிஞ்சிபுரம் போலீசார் மாணவிகள் தாக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளியில் மாணவிகளை தாக்கிய ஆங்கில் ஆசிரியை தீபலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher suspended for assaulting female students in Vellore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->