ஆசிரியரிடம் லட்ச கணக்கில் மோசடி - அதிரடி உத்தரவிட்ட நீதிபதி!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 45) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததால் இணையதளத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து தேடினார். 

அப்போது அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்த வெங்கடாஜலபதி எதிர் முனையில் கனடாவில் வேலை உள்ளது என ஒரு நபர் தெரிவித்துள்ளார். 

இதனை உண்மையான நம்பி வெங்கடாஜலபதி அவர் தெரிவித்த வங்கி கணக்கு ரூ. 4,04,000 அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பிறகு வேலை குறித்து எந்த தகவலும் வராததால் தான் ஏமாற்றப்பட்டது வெங்கடாஜலபதிக்கு தெரியவந்தது. 

உடனே இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் வெங்கடாஜலபதியிடம் செல்போன் மூலம் பேசியது மைஜூரியாவை சேர்ந்த உச்சண்ணா கிறிஸ்டியன் (வயது 45) என கண்டறியப்பட்டது. 

இதனை அடுத்து ஈரோடு, பெருந்துறை பகுதியில் பதுங்கி இருந்த இவரை போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து உச்சண்ணா கிறிஸ்டியனாவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher Fraud of lakhs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->