வரி வசூலில் புதிய சாதனை! ரூ.1 லட்சம் கோடியை நெருங்கும் வணிக வரி, பதிவுத்துறையின் வரி வசூல்!
Tax collection of the Commercial Tax Deprt and Deeds Deprt reached new hike
தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை நடப்பாண்டில் இதுவரை ரூ.87,472 கோடி வருவாய் இயற்றியுள்ளது. இது தொடர்பாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நடப்பு ஆண்டின் அக்டோபர் வரை ரூ.76,839 கோடி ரூபாய் வணிகவரித்துறை வருவாய் ஈட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு வரி வசூல் ரூ.56,310 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.20,539 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று பத்திர பதிவுத்துறையில் நவம்பர் 17ஆம் தேதி வரை ரூ.10,633 கோடி வரி வசூல் ஆகியுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு வரி வசூல் ரூ.7,877 கோடியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.2,785 கோடி அதிகமாகும். இந்த இரண்டு துறையும் சேர்த்து நடப்பு நிதியா ஆண்டில் இதுவரை ரூ.87,472 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு வரி வருவாய் வசூலை விட ரூ.23,314 கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

வணிகவரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.54 லட்சம் நபர்களில் இருந்து 6.73 லட்சமாக அதிகரித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் தமிழகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் வரி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tax collection of the Commercial Tax Deprt and Deeds Deprt reached new hike