#Breaking || டாஸ்மாக் கடைகளுக்கு ஒருநாள் விடுமுறை.! தமிழக அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இன்று 12.10 pm மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடலூருக்கு தென் கிழக்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது. தற்போது நிவர் புயல் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் காற்றின் வேகம் 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி இருக்கிறது.

இது இன்று மதியம் அதி தீவிர புயலாக மாறும். வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும். புயல் கரையை கடக்க கூடிய சமயங்களில் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 130 - 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சமயங்களில் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  தமிழகத்தின் 3 மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மதுபான கடைகள் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac leave nivar cyclone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->